Saturday 18th of May 2024 08:14:38 AM GMT

LANGUAGE - TAMIL
ஹொலிவூட் தம்பதியருக்கு கொரோனா தொற்று!

ஹொலிவூட் தம்பதியருக்கு கொரோனா தொற்று!


ஹொலிவூட் தம்பதிகளான ரொம் ஹங்க்ஸ்-ரீட்டா ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தாம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரொம் ஹங்க்ஸ்.

உலகெங்கும் வேகமாகப்பரவி உலகளாவிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் பெருமளவான நாடுகள் பெரும் பாதிப்பினை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் பிரபல ஹொலிவூட் நடிகரான ரொம் ஹங்க்ஸ் தனக்கும் தனது மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக தனது இன்ஸ்ராகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். இப்பதிவில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

‘ஹலோ நண்பர்களே... ரீட்டாவும் நானும் அவுஸ்ரேலியா வந்தோம். நாங்கள் சோர்வாக உணர்கிறோம். தடிமனும் உடல் வலியும் இருக்கிறது. கொஞ்சம் காய்ச்சலும் இருக்கிறது. இதனால் இருவரும் கொரோனா வைரசுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டோம். இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவோம். மீண்டும் பரிசோதனைகள் செய்யப்படும். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக தனிமைப்படுத்தப்படுகிறோம்’ என்று அப்பதிவில் ரொம் ஹங்க்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE